யோகாத்தாகரம்

எடுத்துத்தண்ணீரில் கலக்கிச்சாப்பிடவும். ஆனி, ஆடி. மாதங் களுக்கு ஏற்றது. வேறு நல் கூறுவதாவது-வாதரோகத்தில் ஆமணக்கு எண்ணையும், திராக்ஷை ரஸம், பசும்பால், நெய், நீர், இவைகள் பித்தநோய்களிலும். திரிபலா கஷாயத்தில் வெல்லம் சேர்த்து கபநோய்களிலும், பாலும் க்டுக்காயும், திரி தோஷங்களிலும் சிறந்த விரேசனங்கள், வேறு நூல் கூறுவதாவ்து-திப்பிவி தோலா ஒன்று, தேசாவரம் தோலா இரண்டு, கடுக்காய் தோலர் நான்கு, இவைகளைப் பொடிசெய்து ஒரு தோலா பொடியை சுடு நீரில் சாப்பிட விரேசனமாகும், வே. நூல் கூறுவதாவது - கடுக் காய்தோலா இரண்டு, சிவதை தோலா மூன்று', சுக்கு தோலா இரண்டு, இந்துப்பு தேர்லா இரண்டு. இவைகளைப்பொடி செய்தி ஒரு தோலா பொடியை வென்னீரில் கலக்கிச்சாப்பிட சுக விரேசன மாகும். கடுக்காய், இந்தப்பு, திப்பிலி, இவைகளைப் பொடிசெய்து வென்னீரில் கலக்கிச் சாப்பிட விரேசனமாகும். இதற்கு நாராசகம் எனப்பெயர். 'தேசம்' என்ற விதைசய திரியலை கஷாயத்தில்சிறு நாகப்பூ பொடியுடன் சாப்பிட பேதியாகும். இதற்கு விசித்ர விக் யாதரம் எனப்பெயர். (சறிப்பு- தேசம் என்ற விதை விளக்க வில்லை. இனி கேர் வாளவித்து சேர்ந்த வி சேசன மருந்துகள் சொல்லப்படுகின்றன. லிங்கம், வெங்காரம், இந்துப்பு, திரிகா, திரிபலை, சூரியகாந்தி விதை, வாய்விளங்கம், பெருங்காயம், ஓமம்இவை வகைக்குத் தோலா ஒன்று, நேர்வாள வித்து தோலா 61இவைகளைக் கல்வத்திலிட்டு எலுமிச்சம்பழ ரசத்தால் அலாத்து மிளகு அளவு வென்னீர் அனுபானத்தில் கொடுக்கவும், தயிர் அன் னம் பத்தியமாகக்கொள்ளவும். உதரம், பாண்டு, வீக்கம், வீக்கத் திடன் கூடிய மகோதரம், மசோத்ரம், சகல ஜ்வரங்கள், ஆகிய இவைகளில் கொடுக்கலாம். இதற்த மேகநாதம் எனப்பெயர். இம் மருந்தை உட்கொண்ட பிறகு தண்ணீரால் கண்களைத் துடைத்துக் கொண்டு, வாசனையை முகர்ந்து, தாம்பூலம் போட்டுக்கொள்ளவும்காற்றில் அலையக்கூடாது, மல மூத்திரங்களை அடக்கக்கூடாதுதூங்கக்கூடாது.