Hair Oil: இளநரை, அடர்த்தி, வளர்ச்சி, பொலிவு என்று கூந்தலுக்கு இந்த எண்ணெய் போதுமே

கூந்தல் பொலிவுக்கு எண்ணெய், இளநரைக்கு எண்ணெய், முடி வளர எண்ணெய் என்று எத்தனை எண்ணெய் பயன்படுத் தினாலும் திருப்தி மட்டும் இல்லையே... இப்படிதான் பல பெண்களின் மைண்ட் வாய்ஸ் புலம்பலாக வெளியே கேட்கிறது.


மார்க்கெட்டில் கிடைக்கும் கூந்தல் வளர்ச்சிக்கு எண்ணெய் எவ்வளவு விலையாக இருந்தாலும் பரவாயில்லை கூந்தல் வளர்ச்சியடைந்தால் போதும் என்று வாங்கி உபயோகப்படுத்தினாலும் அவை கூந்தல் பிரச்சனைக்கு நிரந்தரத்தீர்வாக இருக்குமா என்ற சந்தேகம் உண்டாகும்.

கொஞ்சம் மெனக்கெட்டால் வீட்டிலேயே இந்த ஆரோக்கியம் நிறைந்த கூந்தல் தைலத்தை தயாரிக்கலாம். எளிதாக கிடைக் கக்கூடிய பொருள்கள் தான் எல்லாமே என்பதோடு கூந்தல் வளர்ச்சிக்கு அனைத்து விதங்களிலும் பயன் தரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.