ராகுவின் காரகமான வெங்காயத்தை விரதம் இருப்பவங்க ஏன் சாப்பிடக்கூடாது தெரியுமா

சென்னை: காய்கறி மார்க்கெட்டிற்கு போய் வெங்காயத்தை வெறுமனே பார்த்து ஆசையாய் தடவி பார்த்து விட்டு மட்டுமே வரவேண்டியிருக்கிறது அந்த அளவிற்கு விலை ஏறி கிடக்கிறது. ஆனாலும் சிலர் ஆசைக்கு கால் கிலோ வாங்கினால் சமூகம் பெரிய இடமோ என்று கேட்கிறார்கள். வாங்கிய வெங்காயத்தை கூட பீரோவில் வைத்து எடுத்து கொடுப்பது போல டிக்டாக்கில் பகிர்ந்து காமெடி செய்கிறார்கள். உரிக்க உரிக்க உரியும் வெங்காயம், கடைசியில் ஒன்றும் இல்லாத வெறுமையை உணர்த்தும் தத்துவார்த்தமான காயாகும். அன்றாட சமையலுக்கு மட்டுமல்ல ஜோதிட ரீதியாகவும், மருத்துவரீதியாகவும் பயன்படுகிறது வெங்காயம். இதை விரதம் இருப்பவர்கள் சமையலில் சேர்த்துக்கொள்ளமாட்டார்கள் எல்லாம் காரணமாகத்தானாம்.