ஜப்பானில் சிக்கியுள்ள `டைமண்ட் பிரின்ஸஸ்` என்னும் கப்பலில் பாதிக்கப்பட்டவர்களில் இந்தியர்களும் உள்ளனர் என்று கூறப்பட்ட நிலையில், அந்த கப்பலில் உள்ள இரண்டு இந்தியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
"டோக்கியோவில் உள்ள இந்திய தூதரகம் இந்த கப்பல் பணியாளர்கள் மற்றும் பயணிகளிடம் தொடர்பில் உள்ளது. தற்போது பயணிகளும், கப்பல் ஊழியர்களும் ஜப்பான் அதிகாரிகளால் தனிமை படுத்தப்பட்டுள்ளனர்," என்றும் ஜெயசங்கர் மேலும் தெரிவித்துள்ளார்.
`டைமண்ட் பிரின்ஸஸ்`
ஜப்பானின் யோகோஹாமா துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த `டைமண்ட் பிரின்ஸஸ்` என்னும் கப்பலில் 200க்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் சீனாவை தவிர கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் ஏற்பட்டுள்ள இடம் இந்த கப்பல்தான்.
- 3700 பயணிகளோடு ஜப்பான் துறைமுகத்தில் நிற்கும் கப்பலில் 10 பேருக்கு கொரோனா வைரஸ்
- கொரோனா வைரஸ்: தனித்துவிடப்பட்ட மாற்றுத்திறனாளி சிறுவன் உயிரிழந்த அவலம்
இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் கொரோனா தொற்று பாதிப்பு உள்ளதா என்று மேலும் பலருக்கு பரிசோதினை செய்யப்படவுள்ளது.