வெயிலில் அதிகம் அலைந்தால் தலைசுற்றல், மயக்கம் ஏற்படும். இதற்கு நான்கைந்து ஏலக்காய்களை நசுக்கி, அரை டம்ளர் தண்ணீரில் போட்டு, கஷாயமாகக் காய்ச்சி, அதில் சிறிது பனை வெல்லம் போட்டு குடித்தால் தலைசுற்றல் உடனே நீங்கும்.
விக்கலால் அவதிப்படுவோர் இரண்டு ஏலக்காய்களை நசுக்கி அத்துடன் நான்கைந்து புதினா இலைகளைப் போட்டு, அரை டம்ளர் தண்ணீரில் நன்கு காய்ச்சி வடிகட்டி மிதமான சூட்டில் இந்தக் கஷாயத்தைக் குடித்தாலே போதும்.
வாய்வுத் தொல்லையால் அவதிப்படுவோர் ஏலக்காயை நன்கு காயவைத்து பொடியாக்கி அந்தப்பொடியில் அரை டீஸ்பூன் எடுத்து அரை டம்ளர் தண்ணீரில் கொதிக்கவிடவேண்டும். உணவு உட்கொள்வதற்கு முன்பாக இந்த ஏலக்காய் தண்ணீரைக் குடித்தால் வாய்வுத் தொல்லை உடனே நீங்கிவிடும்.